நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது கைதிகளுக்கு கஞ்சா சப்ளை : வாலிபர் கைது

ஆவடி:  செங்குன்றத்தை சேர்ந்தவர் தோமைராஜன்,  அரக்கோணத்தை சேர்ந்தவர் கௌதமன். இவர்கள் இருவரும் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் கௌதமன், தோமைராஜன் ஆகிய இருவரையும்  ஒரு வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக அரக்கோணம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர், விசாரணை முடிந்து இருவரையும் ரயில் மூலம் ஆவடிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கிருந்து புழல் சிறைக்கு செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்துக்கு  கைதிகளுடன் வந்து பஸ்சுக்காக போலீசார் காத்திருந்தனர்.

அப்போது கைதிகள் கௌதமம், தோமைராஜன் இருவருக்கும் ஒரு வாலிபர் கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயன்றார். அந்த வாலிபரை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் ஆவடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒப்படைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்தார். விசாரணையில், தாம்பரம் அருகே அனகாபுத்தூர், பக்தவச்சலம் நகரை சேர்ந்த அகமதுபாஷா (20) என்பதும், கைதிகள் இருவரும் அவரது நண்பர்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அகமதுபாஷாவை  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: