நர்சிங் கல்லூரி நடத்துவதாக கூறி 30 மாணவர்களிடம் பல லட்சம் மோசடி

சென்னை: ஆவடி, பஜனைக்கோவில் தெருவை சேர்ந்தவர் கலா (18). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிளஸ் 2 முடித்ததும் மேற்படிப்புக்கு கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தார். அவரிடம் ஒருநாள் கோபாலபுரத்தில் உள்ள சக்சஸ் கேரியர் ஜூம் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நர்சிங் மற்றும் டிப்ளமோ படித்து முடித்தவுடன் வேலைவாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய கலா பிஎஸ்சி நர்சிங் படிப்புக்காக 3 தவணையாக 45 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். அவர் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் இவர்கள் மாணவர்களை ஏமாற்றி மோசடி செய்வது தெரிந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கலா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சேப்பாக்கம், ரங்கநாதன் தெருவை சேர்ந்த திருஞானம் (42) என்பவர் கோபாலபுரத்தில் சக்சஸ் கேரியர் ஜும் என்ற பெயரில் போலியாக நிறுவனம் நடத்தியதும், இதேபோன்று 30க்கும் மேற்ப்பட்ட மாணவர்களிடம் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: