காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 2 தொகுதிகளில் காங். போட்டி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சை காங்கிரஸ் கட்சி இன்னும் இறுதி செய்யாமல் மந்தமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக கூட்டணியை முடிவு செய்யும் பணியை காங்கிரஸ் துரிதப்படுத்தி உள்ளது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தேசிய மாநாட்டு கட்சிகள் நேற்று முடிவு செய்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி பற்றிய விவரங்களைத் தெரிவித்தனர்.  

அப்போது, ``நாட்டின் நலன் கருதி, வாழு, வாழவிடு என்ற அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஓட்டுகள் பாஜவுக்கு பிரிவது தவிர்க்கப்படும். உதம்பூர், ஜம்முவில் காங்கிரசும் நகரில் தேசிய மாநாட்டுக் கட்சியும் போட்டியிடும். அனந்தநாக், பாரமுல்லா தொகுதிகளில் இரு கட்சிகளும் நட்பு ரீதியில் போட்டியாக களம் இறங்க உள்ளன. லடாக் தொகுதி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதில் யார் வெற்றி பெற்றாலும் அது இருகட்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படும். ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடும் பரூக் அப்துல்லாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்’’ என்று கூட்டாகத் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: