மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவுக்கு கட்டுப்பாடு

* எம்பி தொகுதிக்கு ரூ.70 லட்சம்

* எம்எல்ஏக்கு ரூ.28 லட்சம்

* தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவின விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சமும், சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சமும் செலவழிக்கலாம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், உடன் வருவோருக்கு 3 வாகனங்கள்தான் அனுமதி என்பது தொடங்கி பிரசாரம் வரை பல்வேறு கட்டுப்பாடுகள், அதிரடி கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தகட்டமாக, தேர்தலில் வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். இதுதவிர, சிறப்பு செலவின பார்வையாளராக தமிழகத்தில் மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் அடுத்த அதிரடியாக, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசார செலவின கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரசாரத்தில் தொண்டர்களுக்கு அளிக்கப்படும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு விலை மதிப்பீடையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். சட்டப்பேரவை தொகுதிக்கு ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது மேற்கொள்ளக்கூடிய செலவினங்களை கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, எந்தமாதிரி செலவுகளை செய்கிறார்கள், அந்த செலவுகளுக்கான விலை நிர்ணயம் என்ன, விதிமுறை மீறி செய்யப்படும் செலவினங்கள் என்ன, வரையறைக்கப்பட்ட செலவினப் பொருட்கள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 208 பொருட்களுக்கான விலை மதிப்பீட்டை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது.

பிரியாணிக்கு வேட்டு!

தேர்தலையும் பிரியாணியையும் பிரிக்கவே முடியாது. டாஸ்மாக் வந்ததில் இருந்து பிரியாணியும், சரக்கும் ‘காம்போ ஆபர்’ போல ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணிக்கு ரூ.180 என விலை நிர்ணயித்துள்ளது. இதன்படி கணக்கிட்டால், ஆயிரம் பேருக்கு பிரியாணி செலவே ரூ.2 லட்சம் ஆகிவிடும். இதுவே வேட்பாளரின் செலவு வரம்பில் பாதியை விழுங்கிவிடும். எனவே, தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் பிரியாணி வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: