சர்வதேச நீச்சல் போட்டி தமிழக மாணவர் சாதனை

துபாய்: மலேசியாவின் கோலாலம்பூர் நகரில்  நடைபெற்ற 55வது சர்வதேச நீச்சல் போட்டியில், யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர்  விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றார். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை 2 நிமிடம், 15  வினாடியில் கடந்து புதிய சாதனையுடன்  தங்கம் வென்றார்.  கடந்த 25 வருட சாதனையை பரமேஸ்வரன் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் மற்றும் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவிலும் பங்கேற்ற அவர் தங்கப் பதக்கங்களை முத்தமிட்ட ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

Advertising
Advertising

சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்து வரும் விசேஷ் பரமேஸ்வரன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனியார் நீச்சல் அகடமியில் பயிற்சியும், யுஏஇ இந்திய உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பும் பயில்கிறார். இவர் தற்போது அமீரகத்தில் வசித்து வந்தாலும் தமிழகம் சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: