சில்லி பாயிண்ட்....

* டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் அறிவித்துள்ளார்.

* தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் அன்ரிச் நோர்ட்ஜே (கே.கே.ஆர்), லுங்கி என்ஜிடி (சி.எஸ்.கே) இருவரும் காயம் காரணமாக ஐபிஎல் டி20 தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

* ஜப்பானில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான சுடர் விளக்கு டோக்கியோ நகரில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடைந்த தோல்வி, உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு சரியான எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

* டெல்லி அணியின் பந்துவீச்சு கூட்டணி பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று முன்னணி வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

* ஹாங்காங்கில் நடைபெறும் ஆசிய பேட்மின்டன் கலப்பு குழு சாம்பியன்ஷிப் தொடரின் பி பிரிவில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சிங்கப்பூரிடம் போராடி தோற்றது.

* கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இளம் வீரர் சோனு யாதவ் (22 வயது) பெவிலியன் திரும்பிய சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: