பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் விரட்டியடிக்க தயாராகும் இந்திய விமானப்படை

ஜம்மு: எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, வட அரபிக்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை இந்தியா குவித்திருக்கிறது. பாகிஸ்தானும் தன் பங்கிற்கு, எல்லையையொட்டி தனது விமானப்படைத் தளங்களில், F-16 போர்விமானங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், கடுமையான பதில் தாக்குதல் நடத்தி, விரட்டியடிப்பதற்கு ஏதுவாக, புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, மத்திய அரசிடம் இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை, இந்திய கடலோர காவல்படை ரத்து செய்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இருநாடுகளின் கடலோர காவல்படையினர் சந்தித்து, பரஸ்பர பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பகிர்ந்து கொள்வர். இந்த வகையில், இந்தாண்டும், இருநாடுகளின் கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்தச்சூழலில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் எழுந்துள்ள பதற்றத்தின் எதிரொலியாலும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை, இந்திய கடலோர காவல்படை ரத்து செய்திருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: