கடந்த ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இம்பால் : ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதிமொழி அளித்த பிரதமர் மோடி, கடந்த 2018ம் ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் இம்பாலில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்திருப்பது நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மோடி கூறியது அபத்தமானது, முட்டாள்தனமானது என அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதறடித்துவிட்டார் என்றும், பணமதிப்பிழப்பு மக்களின் வாழ்க்கையை அழித்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மணிப்பூருக்கு எப்போதெல்லாம் பிரதமர் மோடி வருகிறாரோ அப்போதெல்லாம் உங்கள் கலாச்சாரம், வரலாற்றைப் புண்படுத்துகிறார் என கூறினார். மேலும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களிலும், மணிப்பூரிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று பேசுகிறார், இவர்கள் அனைவரும் உங்கள் கலாச்சாரத்தை அழிக்கக்கூடியவர்கள் என்றும், நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம் என்றும்

ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: