ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் இடையே தோழமை கூட்டணி ஒப்பந்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக், லடாக், உதம்பூர், ஜம்மு ஆகிய 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11, 18, 23, 29 மற்றும் மே 6ம் தேதி 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அனந்த்நாத் தொகுதிக்கு மட்டும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தோழமை ரீதியிலான கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீ்ர் மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரசும் முடிவு செய்துள்ளன. உதம்பூர், ஜம்மு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி போட்டியிடும். அனந்தநாக் மற்றும் பாரமுல்லா தொகுதிகளில் இருகட்சிகளும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் தோழமை ரீதியிலானன போட்டியாக இரு கட்சிகளும் அங்கு களம் இறங்கும். லடாக் தொகுதி குறித்து பேசி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி குறித்து பேசிய குலாம் நபி ஆசாத், தோழமை ரீதியிலான போட்டி என்றால் காங்கிரஸ் அல்லது தேசிய மாநாட்டு ஆகியவற்றில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இருதரப்பினரும் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று கூறியுள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: