×

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

சென்னை: மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். மக்களவை தேர்தல் குறித்து திருவள்ளூர்- லோகரங்கன், வடசென்னை- மவுரியா, மத்திய சென்னை- கமீலா நாசர், ஸ்ரீபெரும்புதூர்- சிவகுமார், அரக்கோணம்- ராஜேந்திரன், வேலூர்- சுரேஷ், கிருஷ்ணகிரி- ஸ்ரீகாருண்யா, தர்மபுரி- ராஜசேகர், விழுப்புரம்- அன்பின் பொய்யாமொழி, சேலம்- பிரபு மணிகண்டன் ஆகியோர் போட்டியிடுவதாக கமல் கூறினார்.

மேலும் நீலகிரி- ராஜேந்திரன், திண்டுக்கல்- சுதாகர், திருச்சி- ஆனந்தராஜா, சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபாஃயுதீன், நாகப்பட்டினம்- குருவையா, தேனி- பாலகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன்.குமரன், திருநெல்வேலி- வென்னிமலை, கன்னியாகுமரி- எபிநேசர், புதுச்சேரி சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். மேலும் மார்ச் 24-ல் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையும், 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் கமல்ஹாசன் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Lok Sabha ,People's Justice Party ,Kamal Hassan , Lok Sabha election,list of candidates,contesting, People's Justice Party, Kamal Hassan
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில்...