×

இரண்டு நாட்கள் முன்னர், குழந்தை வயிற்றிலேயே இறந்ததால் தலை துண்டானது..: பொது சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்

காஞ்சிபுரம்: கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை 2 நாட்கள் முன்னதாகவே இறந்துவிட்டதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று இரவு பிரசவத்திற்காக பொம்மி என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். 30 கிராம மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர்கள் எவரும் இல்லை என்று புகார் கூறப்படுகிறது. அந்த சூழ்நிலையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் செவிலியர்களே பொம்மிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

சுகப்பிரசவத்தின் போது இடுக்கி வைத்து குழந்தையை வெளியே எடுக்கும்போது தலை துண்டாகியது. குழந்தையின் உடல்பகுதி தாயின் வயிற்றில் சிக்கிக் கொண்டது. குழந்தையின் உடல் பகுதியை மீட்க பொம்மி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்த குழந்தையின் உடல் பகுதி பொம்மியின் வயிற்றில் இருந்து போராடி அகற்றப்பட்டது. பிரசவத்தின் போது பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிரசவம் பார்த்த செவிலியரை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பொது சுகாதாரத்துறை விளக்கம்..

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில் தாயின் வயிற்றில் இறந்த நிலையில் சிசு 2 நாட்கள் இருந்துள்ளது. அதுவே தலை துண்டானதற்கு காரணமாகும். குழந்தையின் எடை 1.5 கிலோவாக மட்டுமே இருந்தது. கருவியை பயன்படுத்தி பிரசவம் பார்க்கப்பட்டபோது தான் தெரியவந்துள்ளது. குழந்தையின் தலை உடலுடன் பொருத்த பிரேத பரிசோதனை செய்யப்படும். மேலும், குழந்தையின் தலை துண்டான விவகாரம் குறித்து விசாரணை நடத்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியின் மகப்பேறு தலைமை மருத்துவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பபட்டுள்ளது என்று குழந்தைசாமி கூறியுள்ளார்.

பெண்ணிடம் விசாரணை..

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செங்கல்பட்டு சுகாதார இணை இயக்குநர் பழனி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் விசாரணை நடைபெறுவதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : baby ,Director of Public Health Department , Koovathur, Pregnant, Child, Head, Public Health Department, Childhood
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி