×

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் பின்னடைவு : நெருக்கடியில் பாஜக

இட்டாநகர் : வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் 8 எம்எல்ஏக்கள் கட்சித் தாவி உள்ளதால் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 11ம் தேதி மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்வர் பேமா காங் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளில் 54 தொகுதிகளுக்கு அந்த கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆனால் தங்களுக்கு சீட் வழங்காததால் 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் தேசிய மக்கள் கட்சியில் இணைந்து விட்டனர். இதனிடையே அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் மட்டும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அத்துடன் முக்கிய தலைவர்களும் கட்சி தாவி உள்ளதால் பாரதிய ஜனதாவிற்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

மேகாலயா : பி.எஸ். சங்கமாவின் மகனான கொன்ரட் சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி மேகாலயாவில் பாரதிய ஜனதாவின் உதவியோடு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் திடீர் அரசியல் மாற்றத்தால் அந்த கட்சி பாரதிய ஜனதாவை கைகழுவி விட்டு தனியாக களம் காண முடிவு செய்துள்ளது. தேசிய மக்கள் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவிக்கவும் உள்ளது. மக்களவை தேர்தலில், மேகாலயாவில் உள்ள துரா, ஷில்லாங் ஆகிய 2 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது.

திரிபுரா : பாரதிய ஜனதா ஆளும் திரிபுராவிலும் 3 முக்கிய தலைவர்கள் காங்கிரசில் இணைந்துள்ளதால் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும், அம்மாநில பா.ஜனதா துணைத்தலைவர் சுபால் பவுமிக், பா.ஜனதா மூத்த தலைவர்கள் பிரகாஷ் தாஸ், பிரேம்தோஷ் தேவ்நாத் ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : recession ,states ,crisis ,BJP , Northeast, Legislative Assembly, Arunachal Pradesh, BJP, Recession, Meghalaya, Tripura
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து