குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றவே உடனடி மதுவிலக்கு கொண்டுவரவில்லை...: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி!

ஸ்ரீவில்லிப்புத்தூர்: குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றவே உடனடி மதுவிலக்கு கொண்டுவரவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுயேச்சையைப் போல் அமமுக களத்தில் உள்ளது. கமல்ஹாசன் களத்தில் இல்லை என்றும் காணொளி காட்சி மூலம் தேர்தலை முடித்துக்கொள்வர் எனவும் கிண்டலாக தெரிவித்தார். அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக, திமுக இடையே தான் போட்டி எனவும் அவர் பேசினார்.

அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த தேர்தல் முதல்வர் பழனிசாமியின் அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் தேர்தலாக அமையும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். இதையடுத்து மதுவிலக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம். எனேவ, படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: