×

அருணாச்சலப் பிரதேசத்தில் 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏக்கள் உட்பட 25 பாஜகவினர் கட்சியிலிருந்து விலகல்

இட்டாநகர் : வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் 8 எம்எல்ஏக்கள் கட்சித் தாவி உள்ளதால் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 11ம் தேதி மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்வர் பேமா காங் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளில் 54 தொகுதிகளுக்கு அந்த கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆனால் தங்களுக்கு சீட் வழங்காததால் 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் தேசிய மக்கள் கட்சியில் இணைந்து விட்டனர். இதனிடையே அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் மட்டும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அத்துடன் முக்கிய தலைவர்களும் கட்சி தாவி உள்ளதால் பாரதிய ஜனதாவிற்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  பாரதிய ஜனதா அரசை கவிழ்ப்பதுதான் தங்களின் நோக்கம் என்றும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாலர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம்லின், 6 எம்எல்ஏக்கள் ஆகியோர் விலகியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில்(என்பிபி) சேர்ந்துவிட்டனர்.அருணாச்சலப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த வெய், ஜர்கர், ஜர்பும் ஆகியோரைத் தவிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் தாங்வாங் வாங்கம், தபுக் தகு, பனி தரம், பாங்கா பாகே, வாங்லிங் லோவன்டாங், கார்டோ யெக்கியோர், முன்னாள் அமைச்சர் செரிங் ஜுர்னே ஆகியோர் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Arunachal Pradesh ,Ministers , Northeast, Legislative Assembly, Arunachal Pradesh, BJP
× RELATED அருணாச்சல் முதல்வர் உட்பட 5 பாஜக...