மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: தேர்தல் பிராச்சார கூட்டத்தில் ஸ்டாலின் உரை

திருவாரூர்: 2016 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் இருந்து வெற்றி பெற்றவர் கலைஞர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிராச்சார கூட்டத்தில் பேசினார். மேலும் திமுகவின் தலைநகரம் திருவாரூர் எனவும் ஸ்டாலின் கூறினார். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் கூறினார். மேலும் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்பது வேடிக்கை என்றும் பேசினார். 18 தொகுதி தேர்தல் முடிவு வரும் போது எடப்பாடி அரசு அகற்றப்படும் எனவும் கூறினார். கொள்கை அடிப்படையில் அமைந்தது தான் திமுக கூட்டணி என்று உரையாற்றினார்.

ஊழல் செய்த எடப்பாடியுடன் மோடி கூட்டணி வைத்துள்ளார் என ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் பொதுப்பணித்துறையில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது எனவும் கூறினார். குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கி உள்ளார் எனவும், தற்போது குட்கா வழக்கு சிபிஐ வசம் உள்ளது எனவும் தெரிவித்தார். நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் எனவும், ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மக்களை ஏமாற்ற தான் பாஜக-அதிமுக கூட்டணி வைத்துள்ளது எனவும் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: