×

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம்

திருவாரூர்: அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமல்லாது, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலும் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். அப்போது, திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையின் மூலம், நேர்மை பிறழாத நடுநிலையான நிர்வாகத்தையும், மதச்சார்பற்ற அரசையும் உருவாக்க மக்களுக்கு திமுக உறுதியளிப்பதாக ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், இன்று காலை திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, திருவாரூர் மணக்கால் கிராமத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, “ திமுக ஆட்சியில் இருந்த கம்பீரம் தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இல்லை. வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தால், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். விவசாயிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஸி்டாலின் கூறியுள்ளார். முன்னதாக சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK , Farmers, discrimination with crops, DMK, election report, parliamentary elections
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்