மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானார் பேராசிரியை நிர்மலா தேவி

மதுரை: மதுரை மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி ஜாமினில் விடுதலையானார். பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த 11 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உயர்நீதிமன்றம் தலையிட்டு நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியதையடுத்து நிர்மலா தேவி விடுதலையானார்.

நிர்மலா தேவி ஜாமினில் வரக்கூடாது என்பதற்காக அரசு பல தடைகளை ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜாமின் கி்டைத்து 10 நாட்களுக்கு பிறகு நிர்மலா தேவி விடுதலையானார். வழக்கில் இருந்து நிர்மலா தேவி விடுதலையாவார் என வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசியலின் சதி காரணமாக 11 மாதங்களாக சிறையில் நிர்மலா தேவி இருந்ததாக வழக்கறிஞர் கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: