நாடு பாதுகாப்பாக இருக்க மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் : முதல்வர் பழனிசாமி

சென்னை : நாட்டிற்கு பாதுகாப்பு தரக்கூடிய ஒரே கட்சி பாஜக என்றும், நாடு பாதுகாப்பாக இருக்க மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். உழைப்பால் உயர்ந்த கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், மக்கள் நலன்தான் அதிமுக தலைமையிலான கூட்டணியின் தலையாய நோக்கம் என தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி,

வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டும் என்பதால், மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலில்ல போட்டியிடுவதாக கூறினார். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 130 கோடி மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும், அந்த பாதுகாப்பு வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நலனை முதன்மையான கொண்டு நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கிறோம் என்றும், மத்தியில் ஒரு ஆட்சி மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வலிமையான தலைமையின் கீழ் நாடு இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றும், மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில சுயநலவாதிகள் செய்த சதியினால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க நேரிட்டுள்ளது என்றும் இந்திய துணைக்கண்டமே கண்டிராத மாபெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விழாவில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: