தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை : லட்சக்கணக்கான ரொக்கமும் கிலோ கணக்கில் நகைகளும் பறிமுதல்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் துணி பையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.44 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பயணி வைத்திருந்த கட்டைப் பையில் ரூ.44 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிக்கப்பட்டது. அவர் சேலம் மாவட்டம் தலை வாசலை அடுத்த காட்டுக் கொட்டகையைச் சேர்ந்த அழகுவேல் என்ற கூலித் தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்திற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

*திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்யும் தண்டபாணி என்பவர் ஆவணங்கள் ஏதும் இன்றி கொண்டு சென்றது விசாரணையில் உறுதியாகி உள்ளது.

*மதுரை மாவட்டம் சமயநல்லூர் பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 50 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து மதுரையில் உள்ள பிரபல நகைக் கடைகளுக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 50 கிலோ நகைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

*வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே 2 கார்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜான் பிரிட்டோ, கோவிந்தன் ஆகியோரிடம் இருந்து பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

*விருதுநகர் அருகே ஆர்ஆர்நகரில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.32 லட்சமும் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.

*நெல்லை அருகே அழகிய பாண்டியபுரத்தில் தேர்தல் அதிகாரிகள் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

*திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: