×

பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலை நிர்ணயம்: மட்டன் பிரியாணிக்கு ரூ.200!

புதுடெல்லி: பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

குறிப்பாக, சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளர்கள் தலா ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தலா ரூ.70 லட்சம் மட்டும் செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த விலை பட்டியலில் வாகனங்கள், பணியாட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும். அவை பின்வருமாறு..

பொருட்கள்     -    விலை

மட்டன் பிரியாணி - ரூ200
சிக்கன் பிரியாணி - ரூ.180
டிபன் செலவு - ரூ.100
தண்ணீர் பாட்டில் - ரூ.20
டீ - ரூ.10
பால் - ரூ.15
வெஜிடபிள் ரைஸ் - ரூ.50
இளநீர் - ரூ.40
பூசணிக்காய் - ரூ.120
புடவை மற்றும் டி-ஷர்ட்- ரூ.200 மற்றும் ரூ.175
பொன்னாடை - ரூ.150
பிரச்சார வாகன ஓட்டுநர்கள் ஊதியம் - ரூ.695
மண்டபம் வாடகை செலவு - ரூ.2000 முதல் ரூ.6000 வரை
வால் சைஸ் எல்.இ.டி வாடகை கட்டணம்(8 மணி நேரத்திற்கு) - ரூ.12,000
5 நட்சத்திர ஓட்டலில் ஏ.சி.அறை செலவு - ரூ.9,300
3 நட்சத்திர ஓட்டலில் ஏ.சி.அறை செலவு - ரூ.5,800
பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் மேளத்துக்கான வாடகை செலவு - ரூ.4,500

மற்றும் தொப்பி, எலக்ட்ரானிக் சாதனங்கள், பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள், பிளக்ஸ்கள் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரும் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு முன்பை விட அதிக செலவாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் எலக்ட்ரானிக் கருவிகள், எல்.இ.டி ஸ்கிரீன், ஏசி உள்ளிட்டவற்றின் பங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaigning , Campaign, Candidates, Invoice, Election Commission, Mutton Bryan, Assembly, Parliamentary Election
× RELATED திமுக எம்எல்ஏவுக்காக தேர்தல்...