பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் நடுரோட்டிற்கு வந்து சண்டையிட்டுக் கொண்ட யானைகள்

பென்னாகரம்: பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் 2 யானைகள் சண்டையிட்டுக்கொண்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக வனப்பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், சாலையை கடந்து கிராமப்பகுதிக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 7 மணி அளவில், வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் பென்னாகரம்ஒகேனக்கல் சாலையில் ஆக்ரேஷமாக சண்டையிட்டபடி இருந்தது.

இதனைக்கண்டு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். வாகனங்களை நிறுத்திவிட்டு யானைகள் போகும் வரை காத்திருந்தனர். ஆனால், யானைகள் தொடர்ந்து சண்டையிட்டபடி சுமார் 2 மணி நேரம் போக்கு காட்டியது. பின்னர், பஸ் டிரைவர்கள் தொடர்ந்து ஹாரன் ஒலித்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்த யானைகள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதனால், இரவு 9 மணி வரை வாகன ஓட்டிகள் தவியாய் தவித்தபடி இருந்தனர். யானைகளின் அட்டகாசத்தால் சிலர் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். யானைகள் சென்ற பின்பு மீண்டும் வாகனங்களை எடுத்துச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: