இடாய் புயலால் பேரழிவை சந்தித்துள்ள மொசாம்பிக்..: 1000 பேர் உயிரிழந்த நிலையில் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

பெய்ரா: புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் 1000 பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை இடாய் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை மணிக்கு 177 கி.மீ வேகத்தில் தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்து கிடக்கின்றன. மரங்களும், மின்கம்ங்கள் அனைத்தும் விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்ததால் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அதிபர் ஃபிலிபி நியூஸி, ஆறுகள் உள்ளிட்ட பல இடங்களில் சடலங்கள் மிதப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertising
Advertising

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் 98 பேர் பலியானதாகவும் 217 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஜிம்பாப்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐநா அமைப்புகளும், செஞ்சிலுவை சங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் ஏறத்தாழ 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தியதால் உலக நாடுகள் உதவ வேண்டுமென ஐ.நா சபையின் உலக உணவு திட்ட அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார். ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளை இடாய் புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இடாய் புயல் காரணமாக ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் 26 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: