மக்களவை தேர்தல் : தமிழகம் , மகாராஷ்திரா மாநிலங்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சென்னை : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜனை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 112 தொகுதிகளில் சட்டவிரோத பணப்புழக்கம் இருக்கக்கூடும் என தேர்தல் ஆணையம் கணித்திருக்கிறது. இந்த பட்டியலில் தமிழகத்தின் 39 தொகுதிகளும் இடம் பெற்று இருக்கின்றன

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டு பரப்புரையை தொடங்கி விட்டனர்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் செலவினங்களை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்களது பணிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளராக மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதையும் தடுக்கும் நோக்கில் இவா் நியமனம் செய்யப்பட்டள்ளாா். மேலும் வட சென்னை தொகுதிக்கு சஞ்சீவ் குமார் தேவ், தென் சென்னை தொகுதிக்கு நவீன் குரு பிரசாத், மத்திய சென்னைக்கு முஜீம்தார் மங்கராஜு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் தேர்தல் பார்வையாளராக ஷைலேந்திர ஹண்டா என்பவரை நியமனம் செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: