×

பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 22 பேர் வேட்புமனு தாக்கல்: சத்யபிரத சாகு

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேரும் மனுதாக்கல் செய்தனர். வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா சுயேச்சை சார்பில் தலா ஒரு மனுவும், சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள் என மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தென்சென்னையில் சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள், ஒரு சுயேச்சை என 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கலில் அகிம்சா சோசலிஸ்டு கட்சி, மதுரையில் ரா‌‌ஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கோவை, பொள்ளாச்சி, தேனி, நெல்லை ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் தலா ஒரு வேட்புமனுவும், ராமநாதபுரம், திருப்பூரில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பாராளுமன்ற தொகுதிகளுக்காக 20 வேட்புமனுக்கள், முதல் நாளான நேற்று தாக்கல் செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பெரம்பூர், திருவாரூரில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parliament ,Satyabrata Sahu , first day,filing,nomination papers,parliament,midpouring,22 candidates nominated
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...