×

மக்களவை தேர்தல் 2019...5-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியீடு

டெல்லி: காங்கிரஸ் கட்சி தனது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற தேர்தல் குழு கூட்டத்துக்கு பிறகு இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் நான்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், ஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் நான்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,election ,Congress , Congress party,releasing , 5th candidate, list
× RELATED தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு...