×

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாசன் நகர், வடக்கு வடம்போக்கி தெரு, பிடாரி கோவில் தெரு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் திருவாரூரில் தேர்தல் பரப்பரையின் போது சிறுவர் சிறுமிகளுடன் ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார். பரப்புரையில் போது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களிடம் துண்டு பிரசுரங்களையும் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

முன்னதாக பல தரப்பு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்  தமிழகத்தில் 1.5 கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். விவசாயம், கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மேலும் காஸ் விலை குறைக்கப்படும், பழைய ஓய்வூதியம் திட்டம் கொண்டுவரப்படும். கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ரயில்களில் இலவச ரயில் பயணச்சலுகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,election campaign ,Thiruvarur , DMK leader, MK Stalin launched , election campaign,Thiruvarur
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...