×

துணை வாக்காளர் பட்டியல் 26ம் தேதிக்குள் முடிவடையும்

சென்னை:  தரமணி டைடல் பார்க் வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தலைமையில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் நேற்று மனித சங்கிலி ஏற்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தையும் தொடங்கி வைத்தார். பிறகு துணை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி 26ம் தேதிக்குள் முடிவடையும். பொதுத்தேர்தலின்போது வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செலவினங்களை பார்வையிட மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று பிரகாஷ் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : voter list
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...