×

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்துவோம் ஏழைகளுக்கு மாதம் 1500 உதவித்தொகை: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500, இளைஞர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு, மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதற்கு  வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடனை ரத்து செய்வது, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

 அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். அப்போது, அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பொன்னையன், மனோஜ்பாண்டியன், ரவிபெர்னாட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதாவது: l நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கும், தங்கள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்திட தேவையான வருமானம் இன்றி அல்லலுறும் மக்களுக்கு மாதந்தோறும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரூ.1,500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம்’. அதன்படி வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளோர்,

கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள், கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் உடலுழைப்பு தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,500 நேரடியாக அவர்தம் வங்கி கணக்கில் செலுத்தும் வறுமை ஒழிப்பு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.  l உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை இந்திய இளம் பெண்களும், இளைஞர்களும் பெறும் வண்ணம் அவர்களுக்கு காலத்திற்கேற்ற பயிற்சியையும், திறன் மேம்பாட்டையும் அளிக்கும் எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டுத் திட்டம்’’ பிலிப்பின்ஸ் நாட்டின் ``டெஸ்டா’’ நிறுவனம்,

அந்த நாட்டின் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகெங்கும் வேலைவாய்ப்பு கிடைத்திடும் வண்ணம் வழங்கி வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியை மாதிரியாக கொண்டு நம் நாட்டிலும் புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்திய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் திறன் மேம்பாடு அளிக்கவும், அத்தகைய பயிற்சிகளை பெற்றோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பெறுவதை எளிதாக்கிடவும் புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில்
13ம் பக்கம் பார்க்க

நல்லா தட்டுங்க... ஓபிஎஸ் ஆதங்கம்
திமுக தேர்தல் அறிக்கை 10.30 மணிக்கு வெளியிட்ட பிறகே அதிமுக தேர்தல் அறிக்கை 11.15 மணிக்கு வெளியிடப்பட்டது. பெரும்பாலான அமைச்சர்கள் வரவில்லை. கட்சி தொண்டர்களும் பெரிய அளவில் இல்லை.  துணை முதல்வர் தேர்தல் அறிக்கையை படித்தார். ஒவ்வொரு அறிக்கையாக படித்து முடித்ததும் அங்கிருந்த ஒரு சிலர் மட்டுமே கைதட்டினர். இதனால் சோர்ந்துபோன ஓ.பன்னீர்செல்வம், “நல்லா தட்டுங்க...” என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆனாலும், கைதட்டல் அதிகமாகவில்லை. ஒவ்வொரு அறிவிப்பாக படிக்க படிக்க கைதட்டல் குறைய தொடங்கியது.

வலியுறுத்துவோம்... வலியுறுத்துவோம்
ஒவ்வொரு அறிவிப்பின் முடிவில், இந்த திட்டம் மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என்ற வாசகமே இடம் பெற்றிருந்தது. ஒரு அறிவிப்பில் கூட வெற்றிபெற்றால் நிறைவேற்றப்படும் என்று உறுதிபட கூறாததால், அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை பெரிய அளவில் வரவேற்கவில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK, Election Statement
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...