×

கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்தபோது லாரியுடன் கடத்தப்பட்ட 25 லட்சம் டீ தூள் பறிமுதல்: 3 பேர் கைது; 2 பேருக்கு வலை

புழல்: லாரியுடன் கடத்தி வரப்பட்ட ₹25 லட்சம் மதிப்பிலான டீத்தூளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். இது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பொள்ளாச்சியில் தனியார் டீ தூள் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ₹25 லட்சம் மதிப்பிலான 20 டன் டீ தூள் கொண்டு செல்லப்பட்டது. டிரைவர்  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த லாலா பாஷா லாரியை ஓட்டி வந்தார்.
குறிப்பிட்ட நாளில் டீ தூள் கம்பெனிக்கு வராததால் டிரைவரின் செல்போனுக்கு கம்பெனியில் இருந்து தொடர்பு கொண்டனர். அப்போது டிரைவர், ‘‘லாரி உரிமையாளர் காண்டீபன் லாரியை நான் எடுத்து செல்கிறேன் என  கூறிவிட்டு என்னை மட்டும் செங்குன்றத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்’’ என தெரிவித்துள்ளார். இது அந்த கம்பெனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த 23ம் தேதி செங்குன்றம் காவல் நிலையத்தில் டீ தூள் கம்பெனி மேலாளர் ராம்வீர்சிங் புகார் செய்தார். இதன்படி உதவி கமிஷனர் ரவி, செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர்  தலைமையில் தனிப்படை அமைத்து லாரி டிரைவர் லாலா பாஷாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். டிரைவர் கொடுத்த தகவலின்படி சென்னையில் பதுங்கியிருந்த திருவண்ணாமலையை சேர்ந்த பழனி (32), விஜயன் (33), சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ராஜா (33) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது  இவர்கள்தான் டீ தூளுடன் லாரியை கடத்தி சென்றதும், கொடுங்கையூர் தனியார் நிறுவனத்துக்கு டீத்தூளை ₹13 லட்சத்திற்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கம்பெனிக்கு விரைந்து சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த டீ தூளை லாரியுடன் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். இதன் பிறகு அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையிலடைத்தனர். தலைமறைவான லாரி உரிமையாளர் காண்டீபன், புரோக்கர் தேவராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poonchchi ,Guwahati , Powaicci ,Guwahati,lorry, 3 arrested, Web
× RELATED காங்கிரஸ் தலைவர் பற்றி அவதூறு அறிக்கை;...