இந்த ஆண்டில் 110 முறை பாக். துப்பாக்கிச்சூடு

ஜம்மு:  காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. பதான்கோட் மீதான இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்துவது அதிகரித்துள்ளது. எல்லையோர கிராமங்கள், குடியிருப்புகள், இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. 110 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு அக்னூர் எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. மார்டர் ரக குண்டுகள், சிறிய ரக குண்டுகள் மூலம் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நேற்று காலை வரை நீடித்தது. இதற்கு இந்திய ராணுவம் சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: