தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நாட்டின் தலைமை அதிரடி: அஜித் தோவல் புகழாரம்

குர்கான்: தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் திறமை வாய்ந்ததாக நாட்டின் தலைமை உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக கருதப்படுபவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இவர்தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை விமானங்கள் மூலம் தாக்கி அழிக்க பிரதமருக்கு ஆலோசனை தெரிவித்தவர் என கருதப்படுகிறது. இந்த நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்)யின் 80வது நிறுவன தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியானா மாநிலம் குர்கானில் நேற்று நடைபெற்ற விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்.14ல் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை மறக்க முடியாது.

புல்வாமா போன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு உடனே பதிலடி தரும் தலைமையை நம் நாடு பெற்றுள்ளது. நாட்டின் தலைமை திறன் வாய்ந்ததாகவும் துணிவு வாய்ந்ததாகவும் உள்ளது. நாம் என்ன செய்ய வேண்டும்? நமது வழி என்ன,  நமது பதிலடி தருவது மற்றும் அதற்கான நேரம் எதுவாக இருக்க வேண்டும். இதுபோன்ற தாக்குதல் நடத்த நாட்டுக்கு நாம் தைரியம் தரவேண்டும். சிஆர்பிஎப் வீரர்களாகிய நீங்கள் முன்பு நடந்தது பற்றி கவலைப்படதேவையில்லை. உங்கள் பணியில் தீவிரமாக இருங்கள், உடல்வலிமையை கொள்வதற்கான பயிற்சியை ெபறுங்கள். உங்களுக்கு மனவலிமை அதிகம் இருந்தால் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு சிறப்பானதாக அமைய நீங்கள் வழிகாட்டவேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: