2018ல் ஐநா ஊழியர்கள் மீது 259 பாலியல் குற்றச்சாட்டுகள்

வாஷிங்டன்: ஐநா சபையில் பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு மட்டும் 259 புகார்கள் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஐநா பொது சபையில் கடந்த ஆண்டு ஐநாவின் அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை, ஐநா ஊழியர்கள் ேநரடியான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது தொடர்பாக 148 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் அதன் துணை அமைப்புகள் ஐநாவின் திட்டங்களை செயல்படுத்தும்போது அதன் ஊழியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புகார்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் 165 ஆகவும், 2017ம் ஆண்டில் 138 ஆகவும் இருந்தது.

Advertising
Advertising

ஐநா மற்றும் ஐநா தொடர்புள்ள நிறுவன ஊழியர்களிடையே பாலியல் அத்துமீறல் தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோதிலும், முந்தைய 2 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் ஊழியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐநா முழுவதும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அனைத்து புகார்களும் முழுவதுமாக சரிபார்க்கப்படவில்லை. பல வழக்குகள் முதல்கட்ட விசாரணையிலேயே உள்ளது. ஐநாவின் பணி நிலையங்கள் ஆப்கானிஸ்தான், ெஹய்தி, இந்தியா, ஈராக், லிபேரியா, லிபியா, பாகிஸ்தான், தெற்கு சூடன் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ளது. சமாதான மற்றும் அமைதி நடவடிக்கைகளின்போது தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: