இரு மனைவிகளை சமாளிக்க கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாலாசோபாராவைச் சேர்ந்தவர் தேவ்குமார் பட்டேல். இவர் டி.வி. தொடர்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். பட்டேலுக்கு இரு மனைவிகள். இருவரையும் பொருளாதார ரீதியாக

சமாளிக்க பட்டேல் சிரமப்பட்டார். எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக கள்ள நோட்டுக்களை அச்சடிப்பது என்று முடிவு செய்தார். இதன்படி கள்ளநோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்து வந்தார். இதுபற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் விசாரணை நடத்தி பட்டேல் ஜோகேஸ்வரிக்கு வந்த போது அவரை தடுத்து விசாரணை நடத்தினர். பட்டேலின் கையில் ஒரு பை இருந்தது. அதை போலீசார் சோதனை செய்தபோது உள்ளே கத்தை கத்தையாக ரூ.5 லட்சம் பெருமானமுள்ள ரூ.2000, ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 கள்ள நோட்டுக்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பட்டேலின் ஒரு மனைவி குடும்பத்தலைவி என்றும் மற்றவர் மாடல் அழகி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: