திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு கூடுதல் லட்டு வழங்க அதிக கவுன்டர்கள் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு கூடுதல் லட்டு வழங்க மேலும் கவுன்டர்கள் திறக்கப்பட்டிருப்பதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: லட்டு கவுன்டரில் தற்போது கூடுதல் லட்டுகள் விற்பனை செய்வதற்கு கூடுதல் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலையில் பல இடங்களில் விளம்பர பலகைகள் அமைத்து பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

திருமலைக்கு வரும் முகப்பில் மேலும் அழகுபடுத்தி ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் விதமாக அலங்கார வளைவுகள் அமைக்க வேண்டும்.கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் பக்தர்களுக்கு தெரியும் விதமாக கிரில் கதவுகள் அமைக்கவேண்டும். திருமலையில் உள்ள சுற்றுச்சாலையில் செடிகள் நடும் பணியை ஏப்ரல் 15க்குள் முடிக்கவேண்டும். தேவஸ்தானம் சார்பிலான கோயில்களில் உள்ள ஆபரணங்கள் மற்றும் அங்கு உள்ள கோப்புகளை உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: