×

ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

டெல்லி: பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே காவலில் வைத்து விசாரிக்க  அனுமதிக்குமாறு டெல்லி நீதிமன்றத்திடம் அமலாக்கத்துறை கூறியிருந்தது. லண்டனில் பிணாமி பெயரில் ஓட்டல் வாங்கி விற்றது தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றது. தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து  ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல நாட்கள் விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி பார்டியால நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு விசாரணைக்கு ராபர்ட் வதேரா முழுமையாக ஒத்துழைக்கவில்லை என கூறினார். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து ராபர்ட் வதேராவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை வருகிற 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி அரவிந்த் குமார் அன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Robert Vadra ,investigation ,Implementation Department , Robert Vadra does not cooperate with the inquiry: Implementation Department
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...