கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த பொது அலையில் சிக்கி பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் பரிதமாக உயிரிழப்பு

கடலூர்: கடலூரில் பிளஸ் 2 தேர்வுகள் நிறைவடைத்ததையடுத்து சில்வர் பீச் கடற்கரைக்கு சென்ற மாணவர்கள் ஸ்ரீஹரி, தனுஷ், விக்னேஷ் ஆகியோர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  கடலூர் சி.கே மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வு முடிந்ததையடுத்து, சில்வர் பீச் கடற்கரைக்கு சென்று மாணவர்களுடன் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது 5 பேரில் நான்கு பேர் மட்டும் கடலின் உள்ளே இறங்கி குளித்துள்ளனர். அந்த சமயம் 3 மாணவர்கள் அலையில் சிக்கி பரிதமாக உயிரிழந்தனர். இதையடுத்து, ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் உள்ள சில்வர் பீச் கடற்கரையில் எப்போதும் அலை சீற்றம் சற்று அதிகமாகவே காணப்படும். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு மிகவும் குறைவாக உள்ள பகுதி. எனவே, அப்பகுதியில் யாரும் இறங்கக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதையும் மீறி மாணவர்கள் தற்போது குளித்து அதில் 3 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரையில் இருந்த மாணவன் தகவல் அளித்த பிறகு தான், அங்குள்ள மக்கள் விரைந்து வந்து மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: