நெதர்லாந்து டிராம் வண்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இருவர் கைது : தீவிர விசாரணை

திஹேக்: நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் நகரில் டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  துருக்கியைச் சேர்ந்த கோக்மென் டானிஸ் என்பவரை நெதர்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். இவரை தவிர மேலும் ஒருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரின் அக்டோபர்ப்ளெய்ன் என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நேற்று காலை டிராம் வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதனுள் ஏறிய மர்மநபர் ஒருவர், பயணிகளை  நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதன் பின் அங்கிருந்து தப்பிச்சென்றான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில்  அனுமதித்தனர். இதனை அடுத்து உட்ரெச்ட் நகரில் உள்ள பள்ளிகள், வணிக வளாகங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இதுவும் தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் போலீசார்  அந்த கோணத்தில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உட்ரிச் நகரில் பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை 4-ஆம் கட்டத்தில் இருந்து 5-ஆம் கட்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத தாக்குதலுக்கான மோசமான பகுதியாகவும் உட்ரிச் நகர் அறிவிக்கப்ப்டடுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: