பிளஸ்1 உயிரியல் தேர்வு கடினம் : நீட் மாடல் கேள்விகளால் மாணவர்கள் அதிர்ச்சி

நாமக்கல்: பிளஸ்1 உயிரியல் தேர்வில் நீட் மாடலில் கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று உயிரியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. நடப்பாண்டு பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில்  விலங்கியல் பாடத்துக்கு 2 புத்தகம், தாவரவியல் பாடத்துக்கு 2 புத்தகம் என அதிகமான பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தது. 4 பாடங்களையும் சேர்த்து 70  மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.  

இதுகுறித்து கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் ராஜேந்திரன் கூறுகையில், ‘வழக்கமாக அரசு பொதுத்தேர்வில், தாவரவியல் பாடத்தில் கேள்விகள் எளிமையாக கேட்கப்படும். விலங்கியல் கேள்விகள் சற்று கடினமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டு 2 பாடங்களிலும் கடினமாக கேள்விகள்  கேட்கப்பட்டுள்ளது. தாவரவியல் பாடத்தில் படம் வடிவில் அதிகமானகேள்விகள் வந்துள்ளது. விலங்கியலில் நீட் தேர்வு மாடலில் கேள்விகள்  கேட்கப்பட்டுள்ளது. பாடங்களை நன்றாக புரிந்து படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். அரசு பள்ளி மாணவர்களை  பொறுத்தவரை தேர்ச்சி மதிப்பெண் பெறுவதில் எந்த பிரச்னையும் இருக்காது,’  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: