×

திமுகவின் இடைத் தேர்தல் வாக்குறுதிகள் : தொகுதி வாரியாக குறிப்பிடப்பட்ட திட்டங்களின் விவரம்

சென்னை : 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-வின் மக்களவை மற்றும் இடைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ஸ்டாலின், டி.ஆர்.பாலு தலைமையிலான குழு திமுக-வின் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளதாக கூறினார். மேலும் பேசிய ஸ்டாலின், திமுகவை வெற்றி பாதையில் நடத்தியவர்கள் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் என்றார். முரசொலி மாறனின் லட்சிய கனவுகளை திமுகவின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கும் என்றார். பாரதிய ஜனதாவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சாடினார். நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து பணவீக்கம் அதிகரித்துவிட்டது என்றார்.

இந்நிலையில் தொகுதி வாரியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*ஆண்டிப்பட்டி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் வைகை அணை தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*அரூர் சட்டப்பேரவை தொகுதியில் தருமபுரி - அரூர் சாலை மொரப்பூர் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் அரூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*மானாமதுரை தொகுதியில் ராமநாதபுரம் கூட்டுக குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

*மானாமதுரை தொகுதியில் சுப்பன் கால்வாய், நாட்டார் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்.

*மானாமதுரை தொகுதியில் காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*பெரியகுளம் தொகுதியில் சோத்துப்பாறை அணை தூர்வாரப்படும்.

*பெரியகுளம் தொகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை நிறுவப்படும்.

*குடியாத்தம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்.

*பத்திரப்பள்ளி அணை திட்டம் விரைவில் முடிக்கப்படும்.

*தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தரம் உயர்த்தப்படும்.

*வேப்பாடி அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும்.

*பரமக்குடி தொகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

*பெரம்பூர் தொகுதியில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அகற்றப்படும்.

*பெரம்பூர் விரிவாக்கப்பகுதியில்  பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.  

 *பெரம்பூர் தொகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும் இடைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சோளிங்கர் தொகுதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மலை கோயிலுக்கு செல்ல ரோப் கார் திட்டம் செயல்பபடுத்தப்படும்.

*வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் நெமிலி வரை விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் திமுக வேட்பாளர்கள்

1)நிலக்கோட்டை(தனி) - சவுந்தரபாண்டியன்
2)தஞ்சாவூர் - நீலமேகம்
3)பெரியகுளம்(தனி) - கே.எஸ்.சரவணகுமார்
4)சாத்தூர் - சீனிவாசன்
5)பரமக்குடி(தனி) - சம்பத்குமார்
6)பெரம்பூர் - ஆர்.டி.சேகர்
7)சோளிங்கர் - அசோகன்
8)ஆம்பூர் - வில்வநாதன்
9)ஓசூர் - சத்யா
10)ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன்
11)திருவாரூர் - பூண்டி கலைவாணன்
12) பூந்தமல்லி(தனி) - கிருஷ்ணசாமி
13) திருப்போரூர் - செந்தில் என்கிற எஸ்.ஆர்.இதயவர்மன்
14) குடியாத்தம்(தனி) - எஸ்.காத்தவராயன்
15) பாப்பிரெட்டிபட்டி - மணி 8
16) அரூர்(தனி) - சே.கிருஷ்ணகுமார்
17) மானாமதுரை(தனி) - கரு.காசிலிங்கம் என்கிற இலக்கியதாசன்
18) விளாத்திகுளம் - ஜெயக்குமார் 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK , Assembly, DMK, Election Statement, Promises, Intermediate Elections
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி