மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

பமாகோ: மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாலி நாட்டின் மத்திய பகுதியில் மோப்டி பிராந்தியத்தில் உள்ள ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

Advertising
Advertising

இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். அதே சமயம் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர். ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: