உரிய ஆவணங்கள் இன்றி கேரளாவிற்கு கடத்திய 4.5 கிலோ தங்கம் பறிமுதல்: ரயில்வே போலீஸ் அதிரடி

சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி கேரளாவிற்கு 4.5 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ரயில்வே டிஎஸ்பி எட்வர்ட் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன் தலைமையிலான போலீஸார்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா மாநிலம், திருச்சூர் செல்வதற்காக 4 பேர் சென்ட்ரல் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்களின்றி 4.5 கிலோ மதிப்புள்ள தங்கம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில்  கேரளா மாநிலம், திருச்சூர், ஆர். ஏ.புரம், மயிலக்காரன் ஹவுஸ் அனப்பரா பகுதியை சேர்ந்த லிஹோ, கேரளா, திருச்சூர், ஒலூர், பலன்குழி ஹவுஸ் பகுதியை சேர்ந்த சனில், கேரளா, புடுக்கோடு கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த பிரகாசன், கேரளா, பலாக்காடு, மரியதெடை ஹவுஸ் பகுதியை சேர்ந்த சத்தியபாலன் என கண்டறியபட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: