×

அடிப்படை வசதியில்லாத இடத்தில் பயிற்சி முகாம்: வாக்குச்சாவடி அலுவலர்கள் புலம்பல்

தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் பயிற்சி முகாம், கிழக்கு தாம்பரத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை வகித்தார். பரங்கிமலை சரக காவல் துணை ஆணையர் முத்துசாமி, மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம் கோட்டாட்சியர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மண்டல அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர். தேர்தலை எப்படி சிறப்பாக நடத்துவது, வாக்கு பெட்டிகள் கையாளுதல், யாருக்கு வாக்கு அளித்தோம் என்று தெரிந்துகொள்ள அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபிஏடி இயந்திரத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று  ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மண்டல அலுவலர்கள் அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகள் என்ன என்று இரண்டு நாட்களில் அறிக்கை கொடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின்விசிறி போன்ற எந்த ஒரு வசதிகளும் இல்லாததால் முகாமில் கலந்து கொள்ள வந்த அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.  முகாம் என்ற பெயரில் இப்படி அழைத்து கஷ்டப்படுத்துகின்றார்களே என அனைவரும் புலம்பத் தொடங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு குடிப்பதற்கு டீ, தண்ணீர் வசதிகள் கூட செய்து தராமல் மண்டல அலுவலர்களே அவர்கள் சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டதாக புலம்பித்தள்ளினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Facilities ,Polling Officers , Polling Officers
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...