சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா விஜிலென்ஸ் முதன்மை அலுவலர் நியமனம்

சென்னை: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின், விஜிலென்ஸ் முதன்மை அலுவலராக பர்சுராம் பாண்டாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், பாங்க் ஆப் இந்தியாவில், 1998ம் ஆண்டு புரபோசனரி ஆபீராக முதன் முதலில் தனது வங்கி பணியை துவங்கினார். அதன்பிறகு, பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து, 2017ம் ஆண்டு ஜெனரல் மேனேஜர் வரை பதவி உயர்வு பெற்றார்.  இவர், இந்தியாவில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், குஜராத் உட்பட வெளிநாடான பெல்ஜியத்திலும் பணிபுரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

கடந்த ஆண்டு, ஜூலை மாதம்  தேனா வங்கியின் முதன்மை விஜிலென்ஸ் ஆபீசராக நியமனம் செய்த நிலையில், தற்போது, மத்திய அரசு பர்சுராம் பாண்டாவை சென்டரல் பாங்க் ஆப் இந்தியாவின் விஜிலென்ஸ் முதன்மை அலுவலராக நியமனம் செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: