புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த், சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிட   தடைகோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அசோக் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertising
Advertising

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்,  இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக தண்டிக்கப்பட்டுள்ள அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் சரிதானா என்பது குடியரசு தலைவரின் பரிசீலனையில் உள்ளது என்று வாதிட்டார்.  அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், தொகுதி காலி என்று அறிவித்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றார்.  இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: