ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 19 மீனவர்கள் 2 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் உள்ளனர். குடும்ப சூழ்நிலையால் கடலுக்கு மீன் பிடிக்க சென்று மீனவர்களுடன் கைதான 2 மாணவர்களும் விடுவிக்கப்படவில்லை. 19 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் நகராட்சி பேருந்து நிலைய வளாகம் அருகே மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமை வகித்தார். சங்க பிரதிநிதிகள் சேசுராஜ், எமரிட் உட்பட ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர். இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை உடன் விடுவிக்கவும், சேதமடைந்த நிலையில் உள்ள 130 படகுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசுடமையாக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: