×

கொடநாடு ெகாலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜுக்கு கோவை சிறையில் சித்ரவதை: ஊட்டி கோர்ட்டில் வக்கீல் தகவல்

ஊட்டி:   ெகாடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஆகியோரை கோவை சிறையில் சித்ரவதை செய்வதாகவும், அவர்களை சந்தித்து பேச அனுமதி மறுப்பதாகவும் ஊட்டி கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர்களிடம் பேச வக்கீலுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். நீலகிரியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி காவலாளி கொலை மற்றும் கொள்ளை நடந்தது. இதில், ேகரள மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.  கோவை சிறையில் இருந்த சயான், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, மனோஜ்சாமி, திபு ஆகியோரை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். ஜம்சீர்அலி, ஜித்தின்ஜாய், மனோஜ், உதயகுமார், சதீசன் ஆகிய 5 பேர் ஜாமீனில் உள்ள நிலையில் அவர்களும் நேற்று ஆஜராகினர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் பேசுவதற்கு போலீசார் மற்றும் அரசு தரப்பு வக்கீல்  அனுமதிப்பதில்லை.

சிறையில் அவர்களை தனிமைப்படுத்தியும், சித்ரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர்களிடம் நான் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து, அவர்களிடம் பேசுவதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். தொடர்ந்து விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு : வக்கீல் ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை சிறையில் உள்ள சயான் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கும் தனிமை சிறையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், வாளையார் மனோைஜ மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தண்டனை அளிப்பதற்கு முன்னரே இவர்கள் மன ரீதியாக பாதிக்கும் அளவிற்கு சிறையில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். எனவே, அவர்களை மற்ற கைதிகளை போல் சாதாரணமாக நடத்த வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு ஆனந்தன் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jail ,Kodanadkalai ,Lawyer ,Saanan ,Manoj ,court ,Coimbatore , Kodanadana police, robbery case, Cyan, Manoj, Coimbatore jail,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை