ராமதாசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு காடுவெட்டி குருவின் தங்கைக்கு முன்ஜாமீன்

சென்னை:  கடந்த பிப்ரவரி 1ம் தேதி வன்னிய சங்க தலைவராக இருந்து மறைந்த ஜெ.குருவின் பிறந்தநாள் அவரின்  சொந்த ஊரான காடுவெட்டியில் நடைபெற்றபோது. அப்போது ஏற்பட்ட பிரச்னையில் சமாதிக்கு செல்லும் வழியில்  பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக கொலை மிரட்டல் விடும் வகையில் ஜெ.குருவின் சகோதரி மீனாட்சி பேசினார். இது குறித்து பாமக மாநில துணை பொதுச் செயலாளரான  வைத்தியலிங்கம் அளித்த புகாரில் மீனாட்சி மீது, மீன்சுருட்டி காவல் நிலையம்  4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமெனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரர் மீனாட்சிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: