தன்னைத் தானே கடலூர் வேட்பாளர் என அறிவித்தவர் கமல் கட்சியிலிருந்து விலகினார்

சென்னை: கடலூர், நாகை மாவட்ட பொறுப்பாளர் குமரவேல் விலகல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது. நேர்காணல் முடிவு பெறாத நிலையில், கடலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ளதாக குமரவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

பல பேர் நேர்காணலில் கலந்துகொண்டும் பலர் நேர்காணலுக்காக காத்திருக்கும் சூழலில், நேர்காணலுக்கே வராத குமரவேல், கட்சி கட்டுப்பாடுகளை மீறி தானாகவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான விளக்கம் கேட்டபோது, அவரது விளக்கம் ஏற்கும்படி இல்லை. ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை மக்கள் நீதி மய்யம் ஏற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: