காதோடு.... தகிக்கும் தம்பிதுரை தத்தளிக்கும் முனுசாமி

மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளியை சொந்த ஊராக கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் ஏழாம் பொருத்தம். கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது தம்பிதுரையின் ஆதரவாளராக முன்னாள் எம்எல்ஏ., கோவிந்தராஜ் தான் மாவட்ட செயலாளராக இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அதிகாரத்தை பயன்படுத்தி கே.பி.முனுசாமி, கிழக்கு, மேற்கு என்று கிருஷ்ணகிரியை இரு மாவட்டங்களாக பிரித்தார். அதில் கிழக்கு மாவட்ட செயலாளராக தனது ஆதரவாளரான அசோக்குமார் எம்பி.,யை மாவட்ட செயலாளராக நியமித்தார். இப்படிப்பட்ட கோஷ்டி பூசல் உள்ள சூழ்நிலையில் கே.பி.முனுசாமி இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா? என்ற ேகள்விஎழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: