மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்: திருவாரூரில் நாளை தொடங்குகிறார்

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்கிறார். நாளை திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு 1 மக்களவை, (ஒரு ராஜ்யசபா சீட்), தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமதேக 1, ஐஜேகே 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்கு 20 தொகுதிகளில் போக  திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

தனது பிரசாரத்தை  தலைவர் கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் வருகிற 20ம் தேதி தொடங்குகிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு நாகை நாடாளுமன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார். திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 5   மணிக்கு தஞ்சை  நாடாளுமன்ற  தொகுதி, தஞ்சை  சட்டமன்ற  தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். தஞ்சாவூர் திலகர் திடலில் நடக்கும் மாபெரும்   பிரசார  பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். 21ம் தேதி மாலை  5  மணிக்கு பெரம்பலூர்  நாடாளுமன்ற  தொகுதியில் மாபெரும் பிரசாரப்  பொதுக்கூட்டத்திலும், 22ம் தேதி காலை 10 மணிக்கு சேலம்   நாடாளுமன்ற  தொகுதி மாபெரும்  பிரசாரப்  பொதுக்கூட்டம். மாலை 5  மணிக்கு தர்மபுரி  நாடாளுமன்ற தொகுதி பாப்பிரெட்டிபட்டி   சட்டமன்றத்  தொகுதி மாபெரும்  பிரசாரப்  பொதுக்கூட்டம் ஒடசல்பட்டி  கூட்ரோட்டிலும்,23ம் தேதி காலை 10 மணிக்கு தர்மபுரி  நாடாளுமன்ற  தொகுதி, அரூர்  சட்டமன்ற தொகுதியிலும், அரூர் அண்ணாசாலை அருகில் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம். மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

24ம் தேதி மாலை  5 மணியளவில் வடசென்னை  நாடாளுமன்ற  தொகுதி, பெரம்பூர்  சட்டமன்றத்   தொகுதியிலும், 25ம் தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம்  நாடாளுமன்ற   தொகுதி, திருப்போரூர் சட்டமன்றத்  தொகுதியிலும், மாலை  5  மணிக்கு திருவள்ளூர்  நாடாளுமன்ற   தொகுதி, பூவிருந்தவல்லி  சட்டமன்றத்   தொகுதியிலும், 26ம் தேதி மாலை 5  மணிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை  சட்டமன்றத்  தொகுதியிலும், 27ம் தேதி காலை 10 மணிக்கு தேனி   நாடாளுமன்ற  தொகுதி, பெரியகுளம்  சட்டமன்ற  தொகுதியிலும், மாலை 5 மணி தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலும், 28ம் தேதி மதுரை நாடாளுமன்ற தொகுதி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.29ம் தேதி காலை 10 மணிக்கு சிவகங்கை  நாடாளுமன்ற  தொகுதி, மானாமதுரை  சட்டமன்றத்  தொகுதியிலும், மாலை  5 மணிக்கு ராமநாதபுரம்  நாடாளுமன்ற  தொகுதி, பரமக்குடி  சட்டமன்ற  தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து 30ம் தேதி மாலை  5 மணிக்கு கிருஷ்ணகிரி  நாடாளுமன்ற  தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதியிலும், 31ம் தேதி காலை 10 மணி வேலூர்  நாடாளுமன்ற  தொகுதி, ஆம்பூர்  சட்டமன்ற  தொகுதி, மாலை  5 மணி வேலூர்  நாடாளுமன்றத்  தொகுதி, குடியாத்தம்  சட்டமன்ற  தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

அடுத்த மாதம் 1ம் தேதி காலை 10 மணிக்கு அரக்கோணம்  நாடாளுமன்ற  தொகுதி, சோளிங்கர்  சட்டமன்ற  தொகுதி, மாலை  5 மணிக்கு தென்சென்னை  நாடாளுமன்றத்  தொகுதியிலும், 2ம் தேதி மாலை  4 மணிக்கு நீலகிரி  நாடாளுமன்ற  தொகுதியிலும், 3ம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியிலும், மாலை   5 மணிக்கு கோவை  நாடாளுமன்ற  தொகுதியிலும், 4ம் தேதி காலை 10 மணிக்கு பொள்ளாச்சி  நாடாளுமன்ற  தொகுதி, மாலை   5 மணிக்கு ஈரோடு  நாடாளுமன்ற  தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். 5ம் தேதி காலை 10 மணிக்கு கரூர்  நாடாளுமன்ற தொகுதியிலும், மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற  தொகுதியிலும், 6ம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும், மாலை   5 மணிக்கு ஆரணி  நாடாளுமன்ற தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

இன்று திமுக தேர்தல் அறிக்கை

திமுக வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்நிலையில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும் இருக்கும், கதாநாயகியாகவும் இருக்கும். வில்லனாக இருக்காது என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால், இன்று வெளியாகும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இன்று வெளியாகும் திமுகவின் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: